புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னையில் உள்ள சுமார் 75 மேம்பாலங்கள் மூடப்படும் என காவல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது .  புத்தாண்டு பிறப்பது முன்னிட்டு சென்னை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது .  சென்னை மெரினா கடற்கரை ,  பெசன்ட்நகர் கடற்கரை , எலியட்ஸ் கடற்கரை ,  சாந்தோம் தேவாலயம் ,  மற்றும் நட்சத்திர விடுதிகள்,  கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள  உல்லாச விடுதிகள் என மக்கள் அதிகம்  வந்து செல்லும்  இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன .

சென்னை மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன .  இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  இளைஞர்கள் கூட்டம் அதிகளவில்  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர், மற்றும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அசம்பாவிதங்கள் நடந்து  உயிரிழப்புகளும் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இளைஞர்கள் சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால்  விபத்துக்களும்  அசம்பாவிதங்களும் அதிக அளவில் நடக்கும் என்பதால் இந்தாண்டு அவற்றையெல்லாம்   தடுக்கும் வகையில் விபத்தில்லாத புத்தாண்டாக கொண்டாட போலீசார்  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் . இது குறித்து தெரிவித்துள்ள சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரேமானந் சின்ஹா,  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தெரிவித்துள்ளார் ,  குறிப்பாக இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ரோந்து வாகனங்கள் அதிகபடுத்தப்பட்டுள்ளது. 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது   கடுமையான நடவடிக்கை வழங்கப்படும் என்றும் மதுபோதையில் வாகன் ஒட்டி பிடிபட்டால் அவர்களின் ஒட்டுனர் உரிமம்  ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இன்று இரவு 12 மணிக்கு மேல் வாகனத்தில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில்  பைக் ரேஸ் சென்று  அதில் அதிகஅளவில் விபத்துக்கள்   நடந்தன ஆனால் இந்த ஆண்டு அவை அனைத்தையும் தடுக்கும் பொருட்டு சென்னையில் உள்ள 38 பெரிய மேம்பாலங்கள் உட்பட 75 பாலங்கள் மூடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.   இன்று இரவு யாரும் மேம்பாலத்தில் செல்லமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.