விரட்டி விரட்டி வெளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு… தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கிகள் பறிமுதல்..!
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரவுடிகள் அட்டகாசத்தை முழுமையாக ஒழிக்க முதலில் கைது படலத்தை நடத்த உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு, அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ரவுடிகளுக்கு அச்சத்தையும், பொதுமக்களுக்கு நிம்மதிக்கான நம்பிக்கைகளையும் அளித்து வருகிறார். நள்ளிரவு சோதனையில் கைது படலத்தை தொடங்கி ஆயிரக்கணக்கான ரவுடிகளை கைது செய்தனர். ரவுடிகள் வேட்டையில் அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் சிக்கியதை அடுத்து அதனை தடுக்கும் வியூகத்தை காவல் துறை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் பிரபலமான திருப்பாச்சி அரிவாள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆதார் கார்டு கொடுப்பவர்களுக்கு மட்டுமே திருப்பாச்சி அரிவாளை விற்க வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் அனுமதி இன்றி வைத்திருக்கும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை போலீஸார் தொடங்கியுள்ளனர். அதன்படி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நாமகிரிபேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய போலீஸார் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 80 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் பழனியிலும் உரிமம் இல்லாத இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கிகளை யாரும் பயன்படுத்த கூடாது. மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.