திருப்பூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்து சென்ற கிளி ஜோசியர் ரமேஷ் மர்மநபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூரில் சாலையோரமாக ரமேஷ் என்பவர் ஜோசியம் பார்த்து வருகிறார். இவர் ஜோசியம் பார்ப்பதாக கூறி பெண்களை வசியம் செய்து பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று நண்பகல் 1 மணியளவில், திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பார்க் ரோட்டில் ஜோசியர் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது தலைக்கவசம் அணிந்த படி வந்த மர்மநபர் அரிவாளால் ஜோசியர்  ரமேஷை நடுரோட்டில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். ஆனால் பொதுமக்கள் அதை வேடிக்கை பார்த்தர்களே தவிர அதை தடுக்கவில்லை. கொலை செய்த பின் அந்த நபர் சாவ்காசமாக சாலையில் நடந்து செல்கிறார்.

 

இந்த கொலை தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவாகி உள்ளது. அதேபோல் கொலை செய்த நபர் ஜோசியர் தொடர்பாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து சென்றுள்ளார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.