தூங்கவே முடியல.. 'பப்ஜி' விளையாடாத தம்பி.. கோபத்தில் கையை வெட்டிய பெரியவர்.. திருப்பூர் விபரீதம் !!

திருப்பூரில் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரின் கையை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur an old man cut the hand of a teenager who was disturbed by playing pubg with his friends without letting him sleep

ஒரே நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் வெடிகுண்டுகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக் கொண்டு தங்கள் எதிரிகளை அழிக்க தனியாகவும், நண்பர்களுடனும் போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு தான் பப்ஜி. 

Tirupur an old man cut the hand of a teenager who was disturbed by playing pubg with his friends without letting him sleep

இந்த விளையாட்டுக்கு சிறுவர்கள் தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் விளையாடுபவர்கள் கொள்ளு, சுட்டுத்தள்ளு என்ற வார்த்தைகளை உச்சரித்து கொண்டு விளையாடி வருவதாக பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விளையாட்டில் தோல்வி அடைந்துவிட்டால் சிறுவர்கள் செல்போனை அல்லது வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது முதல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tirupur an old man cut the hand of a teenager who was disturbed by playing pubg with his friends without letting him sleep

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பாறைக்காட்டைச் சேர்ந்தவர் கார்த்திக். கார்த்திக் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு பப்ஜி விளையாடுவது வழக்கமாம். 

இதனால் வீட்டின் அருகில் இருக்கும் ராமசாமி என்ற முதியவர் அடிக்கடி கார்த்திக்கை எச்சரித்துள்ளார். சத்தம் போடாமல் விளையாடும்படியும், இப்படி சத்தம் எழுப்புவதால் தூக்கம் கெடுகிறது எனவும் எச்சரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கார்த்திக்கிற்கும் முதியவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

 Tirupur an old man cut the hand of a teenager who was disturbed by playing pubg with his friends without letting him sleep

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, வீட்டிற்குள் சென்ற முதியவர் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராமசாமி, ஒரு கொலை வழக்கு தொடர்பாக, தண்டனை அனுபவித்து, கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios