Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் பயங்கரம்! கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டி கூறு போட்ட கும்பல்! பார்த்து கதறிய தந்தை!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் செய்யது தாமின் (31). இவர் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். 

Tirunelveli Youth Murder... Police investigation tvk
Author
First Published Aug 6, 2024, 12:14 PM IST | Last Updated Aug 6, 2024, 12:24 PM IST

நெல்லையில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் செய்யது தாமின் (31). இவர் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடையில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவில் வீடு திரும்பிய செய்யது தாமின் இரவு உணவை முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக கூறிவிட்டு மீண்டும் கடைக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: நினைக்கும் போதெல்லாம் உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவரை தட்டித்தூக்கிவிட்டு நாடகமாடிய மனைவி.. சிக்கியது எப்படி?

 ஆனால், கடைக்கு சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது எடுக்காததை அடுத்து அவரது தந்தை கடைக்கு சென்றுள்ளார். கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது தந்தைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செய்யது தாமின் கடைக்குள் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு தந்தை அலறி கூச்சலிட்டார். 

இதையும் படிங்க:  இதுதான் நல்ல சான்ஸ்! இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் போட்றலாம்! கொலையாளிகளுக்கு இன்பார்ம் கொடுத்த பீரதிப்! யார் இவர்?

இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செய்யது தாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios