Asianet News TamilAsianet News Tamil

இளைஞர் படுகொலையில் ரூ.3 லட்சம் கொடுத்து வழக்கை சரிகட்ட நினைத்த காவல்துறை? பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் முத்தையாவின் உடலை வாங்கச்சொல்லி காவல் துறையினர் ரூ.3 லட்சம் கொடுக்க முற்பட்டதாக இளைஞரின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

tirunelveli youngster murder case victims raised allegations against police officers
Author
First Published Jul 26, 2023, 4:49 PM IST

திசையன்விளையைச் சேர்ந்த இளைஞர் முத்தையா கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை காவல்துறை வழக்கை திசை திருப்புகிறது ஆணவக் கொலை என வழக்கு பதிவு செய்யாமல் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றம் சாட்டி உயிரிழந்த முத்தையா குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் குற்றச்சாட்டு வழக்கை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்ற வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை அதுவரை உடலை பெறப்போவதில்லை என அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த அப்பு விளையைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா (வயது 19). இவர் அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருடன் இட்ட மொழியைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் முத்தையாவை பார்க்க சுதா அவரது வீட்டுக்கு வந்துள்ளார். 

6000 கிலோ மட்டன், 4000 கிலோ சிக்கனுடன் தடல் புடலாக தயாராகும் அசைவ விருந்து; திமுக கூட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

பின்னர் மாலையில் முத்தையா சுதாவை அவரது வீட்டில் அழைத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்திற்கு வந்த சுதாவின் அக்காள்  கணவர், முத்தையாவை காதலை கைவிடும் படி வற்புறுத்தியதுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்று இரவில் முத்தையா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக முத்தையாவின் நண்பர்கள் மதியழகன், சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மது போதையில் ஏற்பட்ட தகராறில் முத்தையா படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த  நிலையில் முத்தையாவின் பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அவர்கள் கூறியதாவது ஆரம்பம் முதலே காவல்துறையினர்  ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். உயிரிழந்த எனது மகனின் உடலை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். திசையன்விளை பேரூராட்சி தலைவரின் கணவர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் வந்து மூன்று லட்சம் ரூபாய் தருகிறோம். பணத்தை பெற்றுக் கொண்டு உடலை வாங்கி காரியங்களை செய்யுங்கள் என மிரட்டுகின்றனர். 

மீண்டும் மோடி பிரதமரானால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் - சீமான் கருத்து

சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட சமுதாய அமைப்பினர் கூறுகையில், இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை. சி பி சி ஐ டி காவல்துறைக்கு வழக்கை மாற்ற வேண்டும். திட்டமிட்டு கொலை வழக்கை திசை திருப்ப காவல்துறை முயற்சிக்கிறது. 

ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டும் விசாரிக்க வேண்டும். மேலும் முக்கிய சாட்சியாக உள்ள அந்த பெண்ணை குடும்பத்தில் இருந்து மீட்டு காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என  தெரித்தனர். மேலும் தமிழகத்தில் ஆணவக் கொலை இல்லை என தெரிவிப்பதற்கான முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது. இதில் அரசியல் தலையீடுகள் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை பெறப்போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுக்கா விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே முத்தையா உயிரிழந்ததாக காவல்துறை தெரிவிக்கும் நிலையில் தவறான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயல்வதாக கொலை செய்யப்பட்டவரின் பெற்றோர்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் கூறுவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios