டிக் டாக் வீடியோ பிரபலம் மோகித் கொலை..!  வெளிவந்த அதிர்ச்சி தகவல்..! 

டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமான ஒரு நபர் டெல்லியில் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவின் பகாதுர்கர் என்ற பகுதியை சேர்ந்தவர் மோகித். இவர் டிக் டோக் செயலி மூலம் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். மேலும் ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். மிக குறிப்பாக பாலிவுட் படங்களின் முக்கிய சீன்களில் அதே போன்று நடித்து இந்த செயலி மூலம் வீடியோக்களை பதிவிட்டு, அனைவரின் கவனத்தை ஈர்த்த ஒரு நபர்.

இவருக்கும் அதே பகுதியில் இருக்கும் சில வாலிபருக்கும் பொறாமையின் காரணமாக சண்டை மூண்டுள்ளது. அதிவேகமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் எதிரியாக பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்களும் மோகித்துடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளனர். பின்னர் மோகித்தும் அவர்களை கிண்டல் செய்யும் விதமாக டிக் டாக் வீடியோ மூலம் ஒரு பதிவை ஏற்றியுள்ளார். இது அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய நண்பனின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் மோகித். அவரை பின் தொடர்ந்து வந்த அந்த வாலிபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட்டுள்ளனர். சுமார் எட்டு இடங்களில் குண்டுகள் பாய்ந்து உள்ளதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து துவாரகா டிஜிபி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் குற்றவாளிகளில் ஒரு நபர் மோகித்தை சுடும்போது ஹெல்மெட்டை கழட்டி மீண்டும் அணிந்துள்ளார். இவருடைய முகம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால் மிக விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.