தூத்துக்குடி அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலை தொடர்பாக குற்றவாளிகள் பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதில், ஆழ்வார்திருநகரி சுப்ரமணியன் என்ற காவலர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிந்தார்.

வெடிகுண்டு வீசியதில் படுகாயமடைந்த ரவுடி துரைமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து, சம்ப இடத்திற்கு விரைந்த எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.