மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னால் அந்த குழந்தை பிறக்க வில்லை என சந்தேகமடைந்த கணவன் அந்தப் பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னால் அந்த குழந்தை பிறக்க வில்லை என சந்தேகமடைந்த கணவன் அந்தப் பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அந்தவகையில் திருமணமான பிறகு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடித்து கொலை செய்வது போன்ற பல கொடூரங்கள் பெண்களுக்கு எதிரான அரங்கேறி வருகின்றது. இந்த வரிசையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை கணவன் சந்தேகத்தின் பேரில் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் கபுர்தா அடுத்து கேசர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சித் சிங் (27) இவரது மனைவி பல்விந்தர் கவூர் (24) கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு தற்போது மூன்று வயதாகிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். மஞ்சுநாத் சிங் தனது மனைவியின் நடத்தையும் சந்தேகமடைந்து வந்தார் இதுவே அவர்களின் மோதலுக்கு காரணமாக இருந்து வந்தது. பல்விந்தேர் கவூர் மற்றவர்களுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வருகிறார் என கணவர் வலுவாக சந்தேகித்து வந்தார்.
மனைவி யாருடன் பேசினாலும் அவர்களுடன் தொடர்புபடுத்தி மனைவியை அடித்து துன்புறுத்துவரை மஞ்சித் சிங் வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் மனைவி கர்ப்பம் அடைந்தார், அது முதல் இருந்தேன் மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார் மஞ்சித் சிங், அதைத்தொடர்ந்து பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மஞ்சித் சிங் மகிழ்ச்சி அடையவே இல்லை, மனைவி ஏதோ தவறு செய்து விட்டார் என ஆவேசம் அடைந்தார், குழந்தை தன்னால் பிறக்கவில்லை என முடிவு செய்த அவர், மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். மனைவி தனியாக இருக்கும் சந்தர்ப்பம் பார்தார்.

அப்போது மனைவியின் மருத்துமனையில் தனியாக இருந்த போது, மனைவியின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்தார். பின்னர் பதற்றத்துடன் அங்கிருந்து அவர் வேகவேகமாக தப்பி ஓடினார். பின்னர் மருத்துவர்கள் வந்து பார்த்தபோது அந்தப் பெண் இறந்து கிடந்தார், அதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது பெண்ணின் கணவர் பதற்றத்துடன் அங்கிருந்து தப்பி ஓடுவது போன்ற காட்சிகளில் இருந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணவனை தேடி வருகின்றனர். குழந்தை பெற்றெடுத்த சில மணிநேரங்களிலேயே கணவனே மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
