பஞ்சபூத ஸ்தலங்களில் புனித புனித தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாஸ்கர், பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதே ஆட்டோ ஸ்டாண்டில் பொன்னுசாமி நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பாஸ்ரனை கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த பாஸ்கர் ஆனந்தனை அரிவாளால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆனந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாஸ்கரனை தேடி வந்தனர். ஆனால், பாஸ்கரன் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சிசிடிசி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.