பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்ஃபோன்களில் நான்கு வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அந்த போனில் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாவது தவறானது. அந்த 4 வீடியோக்களில் நான்கு பெண்கள் உள்ளனர் என தெரிவித்தார். இவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக  கருதப்படும் திருநாவுக்கரசுக்கு கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுள்ளார். அவருக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் வக்கீல்கள் யாருமே ஆஜராகவில்லை என்பதால் லதாவே நேரடியாகவே மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனால் லதாவும் இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

ஆனால் நீதிபதி ஆறுமுகமும்  திருநாவுக்கசுக்கு ஜாமீன் வழங்க முடியாது கண்டிப்புடன் உத்தரவிட்டுவிட்டார். இதனிடையே கோர்ட் வளாகத்தில் வந்திருந்த பொதுமக்கள், "உன் பையன் இப்படி செய்துட்டானே" என்று லதாவை பார்த்து நேரடியாகவே  கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த லதா கோர்ட் வளாகத்திலேயே ஆவேசமாக கத்த ஆரம்பித்தார். "யார் தப்பு செஞ்சது? என் பையனா? என் பையன் எந்த தப்பும் பண்ணல. அவன் செல்போனில் எத்தனை பொண்ணுங்க போட்டோ இருக்கோ, அந்த பொண்ணுங்களை பிடித்து முதல்ல விசாரிங்க. என் பையன் மேல போட்டது ஒரு பொய் கேஸ்.. பொய் வழக்கு போட்டிருக்காங்க" என்று கூச்சல் போட்டார்.  ஆனால் அவரின் கூச்சலை யாருமே சட்டை செய்யாமல் கடந்து போய்விட்டனர்.