Asianet News TamilAsianet News Tamil

செய்தித்தாளை யாரும் எடுக்கலையா? அப்போ இதான் நம்ம திருட வந்த வீடு… காசியாபாத்தில் நிகழ்ந்த நூதன கொள்ளை!!

காசியாபாத்தில் செய்தித்தாளை பயன்படுத்தி கொள்ளை கும்பல் ஒன்று ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைககளை கொள்ளையடித்துள்ளது. 

thieves in ghaziabad used a newspaper to robbery
Author
First Published Nov 3, 2022, 5:52 PM IST

காசியாபாத்தில் செய்தித்தாளை பயன்படுத்தி கொள்ளை கும்பல் ஒன்று ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைககளை கொள்ளையடித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ரவீந்திர குமார் பன்சால். இவர் கடந்த அக்.29 ஆம் தேதி தனது மனைவி மற்றும் மகனுடன் வைஷ்ணோ தேவிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதையும், பணம் காணாமல் போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிப்பு.. வெளியான அதிர்ச்சி காரணம்..!

இதுகுறித்து ரவீந்திர குமார் பன்சால் கூறுகையில், திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்ததையும், முன்புறம் இரும்புக் கதவும் திறந்திருந்ததையும் கண்டோம். வீட்டின் வெளியே திறந்த வெளியில் செய்தித்தாள் ஒன்றும் கிடந்தது. வீட்டில் இருந்த அறைகளை சூறையாடி, பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர். சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! மத கலவரத்தை தூண்டும் பதிவு..! கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் எந்த செய்திதாள்களும் வாங்குவது இல்லை. ஆனால் அவர்கள் வீட்டில் செய்தித்தாள் இருந்துள்ளது. கொள்ளையர்கள் வீட்டில் குடும்பத்தினர் இல்லை என்பதை செய்தித்தாள் மூலம் சோதனை செய்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios