திண்டிவனத்தைச் சுற்றியுள்ள கிரமங்களின் வீட்டுச்சுவர்களில் மர்ம குறியீடுகள் வரையப்பட்டுள்ளதால், கிரம மக்கள் கொள்ளையர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள மானூர் அருகே கோபாலபுரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்,  மிக அமைதியான அந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை காலை ஒரு இனம்புரியாத பதற்றம் மக்களிடம் தொற்றிக்கொண்டது. ஆம்,அவர்களின் வீட்டுச்சுவர்களில் பென்சிலால் வித்திசாயமான முறையில் வரையப்பட்டிருந்த குறியீடுகள்தான் அதற்கு காரணம். மிகவும் அமானுஷ்யமாக இருந்த அந்த குறியீடுகளால் அவர்கள் பீதியில் உறைந்துபோயினர். 

குழம்பிப்போன கிராமமக்களுக்கு பிறகுதான் நினைவுக்கு வந்தது அந்த விஷயம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, சில வடமாநில இளைஞர்கள் வீடுவீடாக வந்து பழைய துணிகளை வாங்கிச் சென்றார்களே,அவர்களுடைய வேலையாகத்தான் இது இருக்கும் என யூகித்துக்கொண்டனர். இது ஏதோ மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டு இப்படி வரைந்துள்ளனர்  என்பதை எண்ணி கிரமமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனால் இரவு நேரங்களில் தூங்காமல் விடிய விடிய  ஊருக்கு காவல் இருந்துவந்தனர். இந்நிலையில் திண்டிவனம் நகரப்பகுதியான காந்திநகரிலும் இதேபோல் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்தது. 

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அது குறித்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  ரகசிய குறியீடுகளை  பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்கிருந்த  சிசிடிவி கேமராக்களை அவர்கள் ஆய்வு செய்யதபோது அவர்களுக்கு பெரியஅதிர்ச்சி காத்திருந்தது.  3 வடமாநில இளைஞர்கள் அங்குள்ள சுவர்களில் ரகசிய குறியீடுகளை வரைந்துவிட்டுச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது அந்த காட்சிகளை கண்டு போலீசாரே ஒருகனம் ஆடிப்போயினர்.  உடனே இது தொடர்பான விசாரனையை போலீசார்  தீவிரப்படுத்தினர். அதன் பலனாக சுவற்றில் குறியீடு வரைந்த  3 வாலிபர்களையும் போலீசார் சுற்றுவலைத்தனர், பின்னர் அவர்களை அழைத்துவந்து தங்கள் பாணியில் விசாரனை நடத்தியதில், தாங்கள்  நேபாளம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், இங்கு கூர்கா வேலை செய்யு வருவதாகவும், பணம் தராத விடுகளில் இப்படி வரைந்ததாகவும்  அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர், ஏன் இப்படி வரைந்தார்கள் என்பது குறித்தும், இவர்களுக்கு பின்னால் திருட்டு கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்தும் போலிசார் அவர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.