பேஸ்புக்கில் அறிமுகமான பெண் நிர்வாணமாக வீடியோ காலில் உரையாடி வந்த நிலையில் அதை பதிவு செய்து, அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேஸ்புக்கில் அறிமுகமான பெண் நிர்வாணமாக வீடியோ காலில் உரையாடி வந்த நிலையில் அதை பதிவு செய்து, அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் புதுடெல்லியில் நடந்துள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்கு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் தீய செயலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் தொடர்பு சாதனமாக பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை இப்போது பெண்களை மயக்கி ஆபத்தில் தள்ளும் சதிவலை களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேஸ்புக்கில் பழகிய பெண்ணை காதலிப்பது போல நடித்து அந்தப் பெண்ணுடன் நிர்வாணமாக உரையாடி, அதை வீடியோவாக எடுத்து வைத்து அந்த பெண்ணை பணம் கேட்டு மிரட்டி வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புதுடெல்லி பகுதியை சேர்ந்தவர் அப்சர்கான், இவருக்கு அதே டெல்லியை சேர்ந்த பெண்ணுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்கு இடையில் நெருக்கம் அதிகமானது, ஒருவரை மாற்றி ஒருவர் தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துகொண்டனர் இந்நிலையில் இரவு முழுக்க வீடியோ காலில் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் அப்சர் கானின் பேச்சில் மயங்கிய அந்தப்பெண் அவரை முழுவதுமாக நம்பினார். சில சமயங்களில் இளைஞன் கேட்டுக் கொண்டதின் பேரில் அந்தப் பெண் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசத்தொடங்கினார். அப்போது அந்த இளைஞன் அதை வீடியோவாக பதிவு செய்து வைத்ததாக தெரிகிறது. அதேநேரத்தில் எப்போதெல்லாம் தனக்கு அந்த பெண்ணை நிர்வாணமாக பார்க்க வேண்டுமென அந்த இளைஞன் நினைக்கிறானோ அப்போதெல்லாம் அந்த பெண் நிர்வாணமாக வீடியோ காலில் வரும்படி வற்புறுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் நிர்வாண வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் அல்லது அவரது உறவினர்களுக்கு பகிர்ந்து விடுவேன் என கூறிய அந்தப் பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இருபது லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் விட்டு விடுவதாக கூறியுள்ளார். பின்னர் இதற்கு அஞ்சி பத்து லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக தெரிகிறது, முழு பணம் தராவிட்டால் இந்த வீடியோவை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மீண்டும் அந்த இளைஞர் மிரட்டினார். தொல்லை தாங்க முடியாத அந்த பெண் ஒரு கட்டத்தில் இது குறித்து போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் அந்தப் பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 3 இளம்பெண்களுடன் இவர் தொடர்பில் இருந்ததும் குற்றம்சாட்டப்பட்ட நபர் ராஜஸ்தானின் அல்வார் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
