இதே நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் தொழில் படு ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் கலப்பட சாராயம் குடித்து சாமானிய மக்கள் போதையில் உழலும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருமணத்தில் மது குடித்த இளைஞரின் கண் பார்வை பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் அருந்திய மதுவில் கலப்படம் இருந்ததால் கண்பார்வை பறி போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என சொல்லப்படுகிறது, அதேபோல் பல மாநிலங்களில் இன்னும் மது விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால் அது அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. மது விற்பது குற்றம் என்ற சட்டம் இருந்து வருகிறது, ஆனால் இது வெறும் சட்டத்தில் மட்டுமே உள்ளது, நடைமுறையில் இல்லை. இதனால்தான் வறுமை நிலையிலும் கூட மக்கள் மதுவுக்காக உழைக்கும் பணத்தை எல்லாம் செலவழிக்கும் அவலம் இருந்து வருகிறது.

இதே நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் தொழில் படு ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் கலப்பட சாராயம் குடித்து சாமானிய மக்கள் போதையில் உழலும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்களில் கலப்பட சாராயத்தால் உயிரிழப்பு, கண்பார்வை பறிபோதல் போன்ற கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் லோகோ பைலட் ஒருவர் ரயிலை பாதியில் நிறுத்திவிட்டு மது குடிக்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது அடங்குவதற்குள் பீகார் மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மது அருந்திய வாலிபர்கள் கண் பார்வையை இழந்துள்ளதுதான் அது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள போரஹான் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் தாக்கூர் சலூன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை பக்கத்து கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டார் அவர், அங்கு நடந்த மது விருந்தில் நண்பர்களுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினார், பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் பலர் ரகசியமாக கலப்பட மதுவை அங்கு விற்பனை செய்து வருகின்றனர். எங்கிருந்தோ வாங்கி வரப்பட்ட சாராயம் திருமண விருந்தில் பரிமாரப்பட்டது, மதுவை குடித்து விட்டு முகேஷ் வீட்டுக்கு திரும்பிய நிலையில், அவரின் கண் பார்வை மங்கலானது, அது போதையின் காரணமாக ஏற்படுவதாக அவர் கருதினார், ஆனால் செவ்வாய்க்கிழமை நிலைமை மோசமானது, பார்வைத்திறன் முற்றிலுமாக குறைந்தது, இதனால் அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர், இதனால் அவர் மஷ்ரக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் அங்கு மது அருந்தியதாகவும் அவர் மருத்துவரிடம் கூறினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலப்பட மது அருந்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறினர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் அவரது கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்படவில்லை, இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் சப்ரா சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முகேஷ் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார், இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
