போலி சாமியார்கள் மீது அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில் மேலும் ஒரு சாமியார் மீது பாலியல் புகார் ஒன்றை மைசூர் போலீசில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மைசூரை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி. இவர் மீது 41 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஸ்ரீவித்யஹம்ச பாரதி சுவாமி, தன்னை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறியுள்ளார். மேலும், தன்னை கடத்த முயன்றதாகவும், 

மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில் ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தங்கியுள்ளார். சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக தான் தங்கியுள்ளதாகவும், வரும் 24 ஆம் தேதி அன்று விரதமம் முடைவடைவதாகவும் கூறப்படுகிறது. இவரைப் பார்க்க தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்று வருகின்றனர். வரும் பக்தர்கள் தங்கள் நிதி பிரச்சனை, குடும்ப பிரச்சனைகளை சுவாமி தீர்த்து வைப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான் இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் 41 வயது பெண் ஒருவர்தான் அந்த புகாரை கூறியுள்ளார். புகாரில், எனக்கும் எனது கணவருக்கும் இடையே திருமணமாகி 15 வருடங்களாகிறது. எனது கணவர் இந்த சாமியாரின் பக்தர் ஆவார். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார்.

நமக்குள்ள கடன் பிரச்சனைகளை சாமி தீர்த்து வைப்பார்; நீ போய் பார் என்று கூறினார். ஆனால் நான் போக மாட்டேன் என்று கூறி விட்டேன். இந்த நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 1 மணி இருக்கும். என் கணவர் வீட்டில் இல்லை. அப்போது காலிங் பெல் ஒலித்தது. கணவர்தான் வந்து விட்டார் என்று நினைத்து கதவை திறந்தேன்.

ஆனால், அங்கு சாமியார் நின்றிருந்தார். அவருடன் ஐந்து பேரும், கூடவே எனது கணவரும் நின்றிருந்தனர். சாமியார் வேகமாக வீட்டுக்குள் புகுந்தவர் என்னை தள்ளிவிட்டார். என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். எனது அந்தரங்க உறுப்பிலும் அவர் பலமாக தாக்கினார். அசிங்கமாக பேசி திட்டினார். கோயிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று கோபமாக கேட்டார்.

என்னை படுக்கை அறைக்கு இழுத்து சென்ற அவர் பலாத்காரம் செய்ய முயன்றார். எனது உடையை தூக்கிப் போட்டு தீவைத்து கொளுத்தினார். மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்ட அவர் என்னை கொல்லவும் முயன்றார். பிறகு என்னை வெளியே கூட்டிச் சென்ற அவர், வாகனம் ஒன்றில் என்னை கட்டாயப்படுத்தி ஏற்றினார். வண்டியினுள் அவரது மடியில் என்னை கட்டாயப்படுத்தி உட்கார வைத்தார். என்னை விடுவித்த அவர், 3 நாட்களில் என்னை வந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்றும் அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.

புகாரை பதிவு செய்த போலீசார், பெண்ணின் கணவர் முதல் குற்றவாளியாகவும், சாமியார் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.