Asianet News TamilAsianet News Tamil

உல்லாசத்திற்கு இடையூறு.. கணவரை போட்டுதள்ள கூலிப்படையை ஏவிய கொடூர மனைவி..!

முதற்கட்ட விசாரணையில் கள்ளக்கததொடர்பு குறித்து கண்டித்ததால் கங்கா கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கங்கா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். 

The wife who tried to kill her husband
Author
Krishnagiri, First Published Jun 20, 2021, 5:12 PM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்ய கூலிப்படை ஏவிய மனைவி மற்றும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சசெட்டி அடுத்த உள்ள மஞ்சுகொண்டப்பள்ளி பேல்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(44). விவசாயி. இவரது மனைவி கங்கா(32). கருத்து வேறுபாடு காரணமாக 8 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கங்கா பெங்களூரில் தனியாக வசித்து வந்தார். அப்போது, வேறொருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்துள்ளது. 

The wife who tried to kill her husband

இதனால், சிவக்குமார் அங்குசென்று கங்காவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கணவர் மீது கங்கா ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பேல்ப்பட்டிக்கு 2 இருசக்கர வாகனத்தில்  வந்த மர்மநபர்கள் 4 பேர் சிவக்குமாரை கத்தியால் சரமாரியாக கை, கால்களில்  வெட்டினர். இதில், சிவக்குமாருக்கு  வலது கை மற்றும் வலது காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில் ஆசாமிகள் தப்பியோடிவிட்டனர். 

The wife who tried to kill her husband

உடனே படுகாயமடைந்த சிவக்குமாரை மீட்ட உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்கததொடர்பு குறித்து கண்டித்ததால் கங்கா கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கங்கா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios