ஆந்திர மாநிலத்தில் கோயிலில் திருட சென்ற திருடன் ஒருவன், கோயில் ஓட்டைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து திருடனை பத்திரமாக மீட்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கலகலப்பு திரைப்படத்தை போல் திருட்டு
நடிகர் சிவா மற்றும் விமல் இணைந்து நடித்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய திரைப்படம் கலகப்பு.. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவா ஒரு வீட்டிற்கு திருட செல்லுவார், திருடிய பிறகு நகை மற்றும் பணத்தோடு வெளியே செல்ல முற்படுவார். ஏற்கனவே வந்த ஓட்டை வழியாக வெளியே செல்லும் போது அவரது இடுப்பு பகுதி ஓட்டைக்குள் சிக்கிக் கொண்டு விடும்.. இதனால் என்ன செய்வதென்று சிவா திரு திருவென முழிப்பார். அப்போது விடிந்ததும் நடிகர் சிவா பொதுமக்களிடம் மாட்டிக்கொள்வார். இதே போல் அதே திரைப்படத்தில் மற்றொரு காட்சியில் போலீஸ்காரர் குற்றவாளியை கைது செய்வதற்காக குளியலறைக்குள் உள்ள ஓட்டைக்குள் செல்லும் போது மாட்டிக்கொள்வார் இந்த காட்சி திரைப்பட ரசிகர்களை வெகுவாக ரசித்து சிரிக்க வைத்தது.

கோயிலுக்குள் சென்று திருடிய திருடன்
இதே போன்ற ஒரு சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் எல்லம்மாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள நகைகளை திருட இந்த பகுதியை சேர்ந்த மார்த்தா ராவ் திட்டமிட்டுள்ளார். இதற்காக இரவு நேரத்தில் கோயிலுக்குள் இருந்த ஒரு ஓட்டை வழியாக உள்ளே புகுந்த மார்த்த ராவ் அம்மன் சிலையில் இருந்து நகைகளை திருடியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த நகைகளை திருடிய பிறகு வெளியே தப்பிக்க முயன்றுள்ளான். ஆனால் உள்ளே சென்ற வழியில் வெளியே தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளான். தலை,கை மற்றும் வயிற்று பகுதி வெளியே வந்த நிலையில் இடுப்பு பகுதி வெளியே வரமுடியாமல் சிக்கியுள்ளது. பின்பக்கமாக மீண்டும் கொயிலுக்குள் செல்லவும் முற்பட்டுள்ளான். ஆனால் மாத்தராவ் ஓட்டைக்குள் சிக்கி கொண்டதால் தப்பிக்க முடியாமல் அவதிபட்டுள்ளான்.

ஓட்டைக்குள் சிக்கி தவித்த திருடன்
இரவு முழுவதும் கோயில் சுவற்றில் சிக்கியிருந்த திருடனை காலையில் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து திருடனை மீட்ட அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திரைப்பட காட்சியில் வருவது போல் திருட சென்ற இடத்தில் திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
