கோவையில் இரண்டு தினங்களில்  21 பைக்குகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகள் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலிமை பட பாணியில் பைக் திருட்டு

நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பொதுமக்களின் பைக்குகளை திருடி தங்களது குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தும் இதனை நடிகர் அஜித் கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வார். இது போன்று ஒரு சம்பவம் கோவை பகுதியில் நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை பகுதியில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மீண்டும் 9 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டதாக புகார் வந்துள்ளது. இந்த புகாரால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

2 நாட்களில் 21 பைக் திருட்டு

வலிமை படத்தில் வருவது போல் நிஜத்திலும் மர்ம கும்பல் 2 நாட்களில் 21 பைக்குகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரியகடை வீதி, காட்டூர், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், பீளமேடு உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீளமேடு வி.கே. ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (45) என்பவர் தனது மொபட் திருட்டு போது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில் இளைஞர் ஒருவர் மொட்டை லாவகரமாக திருடி மெதுவாக சாலையில் தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் 2 நாட்களில் 21 புகார்கள் பதிவாகி உள்ளது. வாகனங்களை திருடும் கும்பல் கோவையில் முகாம் ஈட்டுள்ளனரா ? அவர்கள் யார் ? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.