கந்து வட்டி கொடுத்தவர் தம் மனைவியை அபகரித்துக் கொண்டதாக மரண வாக்குமூலம் அளித்து இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரை சேர்ந்த சரத்குமார் என்ற குட்டி என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மீஞ்சூரை சேர்ந்த மஞ்சுளாவை காதல் திருமணம் செய்தார். கறிக்கடையில் தொழில் செய்து வந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக எண்ணூரை சேர்ந்த பாபுவிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் சரத் பாபு.

ஆனால் நீண்ட நாட்களாக சரத்குமார் பணத்தை திரும்ப தராததால் பணத்தை வட்டிக்கு கொடுத்த பாபு பணத்தை திருப்பி கேட்க அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றபோது அவரது மனைவி மஞ்சுளாவிற்கும் பாபுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளத்தொடர்பால் சரத்குமாரிடம் இருந்து மனைவி மஞ்சுளா தமது இரண்டு குழந்தைகளை எடுத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சரத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் முறையான விசாரணை நடக்கவில்லை எனவும், கந்துவட்டி கொடுத்த கவுன்சிலரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

 உயிரிழந்த சரத்குமார் 4 வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தம்முடைய சாவிற்கு கந்துவட்டி பாபுவும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என தெரிவித்துள்ளார். மனைவியின் நம்பரை தந்தால் மட்டுமே கந்துவட்டி தருவதாக எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொள்வார். வேறு வழியின்றி நாங்களும் நம்பரை கொடுத்துவிட்டோம். மாமா என்று அழைத்தால் மட்டுமே பணம் தருவதாக கூறும் போது வேறு வழியின்றி என் மனைவியும் சொல்ல வேண்டிய நிலை. அதிலிருந்து என் மனைவியிடம் தேவையின்றி பேசி வந்து அவரது மனதினை களைத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். இப்படி இக்கட்டான சூழலில் தினமும் என் வீட்டிற்கு வந்து பாபுவின் குடும்பத்தினர் தினமும் தொந்தரவு கொடுத்துவருவதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

என் குடும்ப சந்தோஷத்தை களைத்தும் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டார் கந்துவட்டி பாபு. இவரும் இவரது குடும்பத்தினரும் தான் என்னுடைய மரணத்திற்கு காரணம் என விரக்தியில் மரணவாக்குமூலம் அளித்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.