Asianet News TamilAsianet News Tamil

கொள்ளையர்கள் வீசி சென்ற ரூ.1 கோடியே 56 லட்சம்... ’மச்சக்கார’ ஸ்பென்ஸர் பிளாஸா உரிமையாளர்..!

சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் மர்ம நபர்கள் வீசி விட்டு சென்ற 1 கோடியே 61 லட்சத்து 560 பணம் சென்னை ஸ்பென்ஸர் பிளாஸா உரிமையாளர்களில் ஒருவரது பணம் எனத் தெரிய வந்துள்ளது.  

 

The robbers flew past Rs 1 crore 56 lakhs
Author
Tamil Nadu, First Published May 27, 2019, 5:06 PM IST

சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் மர்ம நபர்கள் வீசி விட்டு சென்ற 1 கோடியே 61 லட்சத்து 560 பணம் சென்னை ஸ்பென்ஸர் பிளாஸா உரிமையாளர்களில் ஒருவரது பணம் எனத் தெரிய வந்துள்ளது.

 The robbers flew past Rs 1 crore 56 lakhs

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் வரதராஜபுரம், ஏரிக்கரை லாக் தெருவில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அந்த இடத்தில் சுற்றிச் சுற்றி வந்தனர். போலீசாரின் கண்களில் பட்டதையடுத்து விசாரணை செய்வதற்காக அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் நிற்காமல் வேகமாகச் சென்றதால் சந்தேகம் வலுத்ததை அடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர்.The robbers flew past Rs 1 crore 56 lakhs

போலீசார் தன்னை விடாமல் துரத்தியதை அடுத்து அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் இருந்த 3 பைகளை வீசியெறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துரத்துவதை நிறுத்திவிட்டு ரோந்து வாகனத்தை விட்டுக் கீழிறங்கி பைகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது. பணத்தைக் கைப்பற்றி கோர்ட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்திருந்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து வரும்போது தப்பிப்பதற்காக பணத்தை வீசிச் சென்றது தெரிய வந்துள்ளது. நந்தனம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். ஸ்பென்ஸர் பிளாஸா இயக்குநர்களில் ஒருவராகவும் கட்டட தொழிலும் நடத்தி வருபவர். The robbers flew past Rs 1 crore 56 lakhs

இந்நிலையில், அவர் தொழில் நிமித்தமாக கொல்கத்தா சென்றிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரது வீட்டை உடைத்து கொள்ளையர்கள் 1 கோடியே 56 லட்சத்து 560 ரூபாயை கொள்ளையடித்து சென்று இருக்கின்றனர். அப்போது போலீஸ் கண்ணில் படவே கொள்ளையர்கள் பணத்தை வீசி விட்டு சென்றிருக்கின்றனர். அந்தக் கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் போலீஸார் கண்ணில் படாமல் இருந்த அந்தப்பணம் திரும்ப மொத்தமாக கிடைத்து இருக்காது. 

Follow Us:
Download App:
  • android
  • ios