பால் வாங்கச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கியதில் மரணமடைந்த சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 T.Balamurukan

பால் வாங்கச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கியதில் மரணமடைந்த சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மீறும் நபர்கள் மீது போலீசார் ஆங்காங்கே தடியடி நடத்தி வருகின்றனர்.பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.காரணம் இல்லாமல் வெளியே வரும் வாகனம் ஓட்டிகள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் பால் வாங்கச் சென்ற இளைஞரை போலீசார் தாக்குதலில் மரணமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் கொரோனாவை விட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லால் ஸ்வாமி (32) என்ற அந்த இளைஞர் புதன் மாலை வீட்டிலில் இருந்து புறப்பட்டு பால் வாங்கச் சென்றார் என்றும், அப்போது அங்கே போலீசார் நடத்திய தடியடியில் அவர் காயம்பட்டு வீட்டிற்கு வந்து, உடல் நலம் இன்றி இருந்ததாகவும், பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.ஆனால் தடியடி எதுவும் நடத்தப்படவில்லை. இறந்தவர் உடல்நலக்குறைவின் காரணமாக, இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்தார் என ஹவுரா நகர காவல்துறை இணை ஆணையர் ராஜூ முகர்ஜி தெரிவித்துள்ளார்.