Asianet News TamilAsianet News Tamil

கல்யாணத்துக்கு வெறும் 4 நாட்கள்... போலீசோடு லாட்ஜில் தங்கிய இளம் டீச்சர்க்கு ஏற்பட்ட பரிதாபம்... மயிலாடுதுறையில் பகீர் சம்பவம்!!

திருச்சி சிறைத்துறை போலீசுக்கும், தனியார் பள்ளி ஆசிரியை சித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணதிற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் ஆசிரியை லாட்ஜில் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

The mysterious death of young teacher at lodge
Author
Mayiladuthurai, First Published Aug 19, 2019, 1:01 PM IST

திருச்சி சிறைத்துறை போலீசுக்கும், தனியார் பள்ளி ஆசிரியை சித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணதிற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் ஆசிரியை லாட்ஜில் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சித்ரா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா சிறுபுலியூரைச் சேர்ந்த துரைசாமி மகன் ராஜ்குமார் என்பவருக்கு கல்யாணம் நிச்சயம் செய்துள்ளனர். ராஜ்குமார் மத்திய சிறை காவலராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயம் முடிந்து இன்னும் நான்கு நாட்களில் கொல்லுமாங்குடியில் கல்யாணம் நடக்க இருக்கிறது.

இந்தநிலையில் கல்யாணம் செய்து கொள்ளக்கூடிய இருவரும் செல்போனில் பேசியும், சண்டைப்போட்டும், அடிக்கடி வெளியில் சுற்றிக்கொண்டும் இருந்துள்ளனர். சித்ராவின் வீட்டிற்கு ராஜ்குமார் அடிக்கடி வருவதும், சித்ராவை அழைத்துக்கொண்டு ஒன்றாக ஊர் சுற்றுவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சுதந்திர தினத்தன்று ராஜ்குமார் சித்ரா வீட்டிற்கே சென்று சித்ராவை அழைத்துக் கொண்டு வேலைப்பார்க்கும் திருச்சிக்கு சென்று அங்குள்ள மாநகராட்சி லாட்ஜில் இருவரும் டூம் எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் காலை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறி சித்ராவின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்சென்று பெண் வீட்டில் கொடுத்திருக்கிறார். இதைக்கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சித்ராவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்களும், கிராமத்தினரும் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி  மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கண்டோன்மென்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழகர் தலைமையில் போலீசார் மயிலாடுதுறை வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மகாராஜபுரம் சேர்ந்த அவரது உறவினர்கள் கூறுகையில்,"  ஆரம்ப முதலே அந்தப்பெண்ணுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே கிடையாது. சித்ரா வேறு ஒரு பையனை கல்யாணம் செய்ய நினைத்து காதலித்திருக்கிறார். அதை தெரிந்தே சித்ராவின் அம்மா இந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறார். நிச்சயம் முடிந்ததிலிருந்து ராஜ்குமாரக்கும், சித்ராவிற்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சித்ராவை மனமாற்றம் செய்யவும் மருத்துவ பரிசோதனைக்கு செய்யவும் திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். ராஜ்குமார். லாட்ஜ் அறையில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு போய்ட்டதா சொல்லுறாங்க, அப்படின்னா தனியா இருக்கும்போது ஏற்பட்ட மன அழுத்தத்தால் சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சித்ரா விரும்பிய பையனால் இது நடந்ததா?அல்லது ராஜ்குமார் கொலை செய்துவிட்டு நாடகம் நடத்துகிறாரா என  புரியல.  

திருச்சியில் நடைபெற்ற சம்பவத்தை அருகில் உள்ள போலீசில் தெரிவிக்காமல். 120 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சித்ரா விட்டிற்கு உடலை கொண்டுவந்தது ஏன்?  சித்ராவின் சாவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துது, நியாயம் தெரியனும் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். சித்ராவின் மரணத்திற்கு ராஜ்குமாரின் டார்ச்சரா, வேறு நபரால் இந்த மரணம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios