திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் காதல் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண் நண்பருடன் மணிக்கணக்கில் அந்தப்பெண் பேசி வந்த நிலையில், கால் ரெக்கார்டர் மூலம் அதைக் கண்டு பிடித்த கணவன் அந்த பெண்ணை அடித்து கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர்

திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் காதல் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண் நண்பருடன் மணிக்கணக்கில் அந்தப்பெண் பேசி வந்த நிலையில், கால் ரெக்கார்டர் மூலம் அதைக் கண்டு பிடித்த கணவன் அந்த பெண்ணை அடித்து கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர். 

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக சமூகத்தில் கலாச்சார சீர்கேடு, அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. செல்போன் வந்தது முதல் அது மனித சமூகத்திற்கு எந்தளவுக்கு பேருதவியாக இருந்து வருகிறதோ அதே அளவுக்கு அதனால் கள்ளக்காதல் உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

செல்போனை வைத்தே பெரும்பாலான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. செல்போனை வைத்து பண மோசடிகள், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவது போன்ற பல குற்றங்களுக்கும் செல்போன ஆயுதமாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தனது ஆண் நண்பருடன் மனைவி மணிக்கணக்கில் பேசி வந்த நிலையில் கால் ரெக்கார்ட் மூலம் கணவன் கண்டுபிடித்த நிலையில் மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் புகழ் கொடி என்கின்ற டில்ல ( 23 ) ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சரிதா (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதையும் மீறி திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். புகழ் ஆட்டோ ஓட்டுவதற்கு வெளியே வந்த பிறகு மனைவி சரிதா மணிக்கணக்கில் தனது ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே இதனால் தகராறு ஏற்பட்டது. மனைவி யாருடன் பேசுகிறார் என்பதை கண்டறிய அவரின் செல்போனில் கால் ரெக்கார்டர் ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்தார் புகழ்.

அது தெரியாமல் மனைவி சரிதா மீண்டும் ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் அவரை செல்போனை கால் ரெக்கார்டர் கேட்டபோது சரித ஆண் ஒருவருடன் நெருக்கமாக பேசியது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த புகழ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. ஆத்திரமடைந்த புகழ் காதல் மனைவியுடன் நேற்று இரவில் சண்டை போட்டார். அப்போது மனைவி சரிதாவை புகழ் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் புகழ் உறங்கிவிட்டார். பிறகு காலையில் கண் விழித்தபோது மனைவி சரிதா சுயநினைவு இல்லாமல் படுக்கையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த புகழ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சரிதாவை தூக்கிச் சென்றார்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். சரிதாவை அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி இறந்ததை கண்டு கதறி அழுதார். இதற்கிடையில் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சரிதாவின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.