தன் மகனின் ஆவணங்களை கொடுக்க வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் அந்தப் பெண்ணை கற்பழித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து கொடுத்த புகாரில் கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் வழக்கு பதிவி செய்து தேடி வருகின்றனர்.
தன் மகனின் ஆவணங்களை கொடுக்க வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் அந்தப் பெண்ணை கற்பழித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து கொடுத்த புகாரில் கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் வழக்கு பதிவி செய்து தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையும், அரசும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும், இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பெண்ணொருவர் கிரிக்கெட் பயிற்சியாளரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் அப்பகுதியிலுள்ள சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் தன் மகனை பயிற்சிக்காக சேர்த்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவனின் ஆவணங்களை வழங்குவதற்காக அந்த கிரிக்கெட் பயிற்சியாளரின் வீட்டிற்கு அந்த பெண் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்துள்ளார் அவர். இது தெரியாமல் அதை குடிந்த அந்த பெண் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை படுக்கை அறைக்கு தூக்கி சென்ற அவர், அந்தப் பெண்ணுடன் அசை தீரும்வரை உடலுறவு கொண்டுள்ளார்.

பின்னர் சுயநினைவுக்கு வந்த அந்தப் பெண், ஆடைகள் கலைந்து மெத்தையில் தான் கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து அந்த பயிற்சியாளர் இடத்தில் கேட்டபோது, இன்று இரவும் தன்னுடன் தங்குமாறு அவர் வற்புறுத்தியுள்ளார். எனவே தனக்கு ஏற்பட்ட நிலைமையை உணர்ந்து கொண்ட அந்த பெண், தனது கணவருக்கு போன் செய்து வரவழைத்து, அங்கிருந்து தப்பித்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது கணவருடன் கூறி கதறிய அந்த பெண், தனது கணவரின் உதவியுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர் மீது பவழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து சென்றபோது, அந்த நபர் தலைமறைவாகியுள்ளது தெரிந்தது. இதனால் போலீசார் அந்த தபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
