சென்னை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாளம் மார்கெட் அருகில் சந்தேகபடும் படியாக இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவரிடம் 50க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான மாவா பாக்கெட்டுகள் மற்றும் 1100 ரூபாய் பணம் இருப்பது தெரியவர அதை பறிமுதல் செய்த போலீசார்

மேலும் விசாரணை நடத்தியதில் அந்த நபர் அனித்குமார் பாண்டே (35) என்பதும் இவர் ஓட்டேரி அடுத்த தலைமைச் செயலக காலனியில் உள்ள தனது வீட்டில் வைத்து மாவா தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரியவர

அதை தொடர்ந்து அனித்குமார் வீட்டிற்கு சென்ற போலீசார் மாவா தயாரிக்க வைத்திருந்த சுமார் 20 கிலோ போதை வஸ்துக்கள் மற்றும் மிக்சி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனா். அதை தொடர்ந்து அனித்குமார் பாண்டேவை கைது செய்து சிறையில் அடைத்தனா்...