ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு போலீஸார் வலைவீசி வருகின்றனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். வங்கி அதிகாரியான அந்தப் பெண்ணுக்கு பார்வை குறைபாடு எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது கணவரும், குடும்பத்தினரும் ராஜஸ்தானில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் அப்பெண் மட்டுமே வீட்டில் தனியாக  இருந்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்துவிளக்கம் அளித்துள்ள காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உரிய விசாரணையை தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.