கோவையில் மெடிக்கல்லில்  வாங்கிய மாத்திரை வைக்கப்பட்டிருந்த அட்டைக்குள்  இரும்புக் கம்பி இருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் முஸ்தபா என்பவர் மருந்துகளை வாங்கி இருக்கிறார். அவர் வாங்கிய மத்திரை குப்பியை திறந்த உடனே இரும்புக் கம்பி இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இதுகுறித்து மருந்து வாங்கிய கடை உரிமையாளரை அணுகி புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்ததற்கு நாங்கள் காரணம் அல்ல. மாத்திரைக் குப்பிக்குள் இரும்பு கம்பி இருந்ததற்கு காரணம் அதனை தயாரித்த நிறுவனம் தான் காரணம் என சம்பந்தப்பட்ட மருந்துக்கடைகாரர் கூறியுள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முஸ்தபா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. உடல் நலத்தை பேணுவதற்காக வாங்கப்பட்ட மாத்திரைக்குள் இரும்புக் கம்பிகள் இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.