அப்பாவைப் பழிவாங்குவதற்காக  முதலமைச்சருக்குக் கொலை மிரட்டல் விட்டதாக  மகனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வந்த போன் பேசிய மர்ம நபர் தனது பெயர் குருசங்கர் எனவும், தான் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்தவன் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘முதல்வர்  பழனிசாமி கொடைக்கானல் வரும்போது அவரை, கொடைக்கானலில் வைத்து அவரை கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் திண்டுக்கல் வத்தலகுண்டுவை அடுத்த விராலிப்பட்டியைச் சேர்ந்த குருசங்கர் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசியது தெரிய வந்தது. இதுதொடர்பாக சென்னை போலீசார் திண்டுக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடந்த விசாரணையில்;  என் பெயர் குரு சங்கர். நேற்று காலை நான் வீட்டில் 85,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுவிட்டேன். பணம் காணாமல் போனதும் என் அப்பா, உறவினர்கள் மூலமாக என்னிடம் நைசாக பேசி அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு. உடனே சில உறவினர்களை அழைத்துக்கொண்டு கொடைக்கானல்க்கு வந்தார், என்னிடம்  செலவு போக மிச்சம் இருந்த 65,000 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு என்னை வீட்டுக்கு வரச்சொன்னார்கள். ஆனால் நான் கோபத்தில் அவர்களோடு போக மறுத்துவிட்டேன்.

பணத்தை அப்பா பறித்துக்கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த நான். 1 மணி நேரம் கழித்து உறவினர் ஒருவருக்கு போன் பண்ணி, என்னை ஜாலியா இருக்க விடாமல் பணத்தைப் பிடிங்கிட்டு போயிட்டீங்க இல்ல. இன்னும் ஒரு மணி நேரத்துல அப்பாவைக் கதற வைக்கிறேன் பாருங்க என்று சொல்லியபடியே போனை கட் செய்துவிட்டேன்.
 
எப்படி பழி வாங்குவது என யோசித்த நான்,   காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு, முதல்வர் கொடைக்கானல் வரும்போது பார்த்துக்கிறோம் என மிரட்டிவிட்டு செல்போனை ஆப் செய்து விட்டேன். நான் நினைத்ததைப்போலவே ஒருமணி நேரத்தில் போலீசார் ஏன் வீட்டிற்கு சென்று என் அப்பாவை பயம் படுத்தியுள்ளனர்.