கஞ்சாவுக்கு அடுத்து அதிகளவு விற்பனையாகும் போதை ஆயில்.. கோவையில் அதிரடி காட்டிய ரயில்வே துறை !
ரூ.2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில் திருப்பூர் - கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.அப்போது எஸ்-10 பெட்டியில் 71 ஆவது இருக்கையின் அடியே மர்ம கவர்கள் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’
பிறகு இதையடுத்து 3 பிளாஸ்டிக் கவர்களையும் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் அதனை சோதனை செய்த போது, அதில் 2.2 கிலோ ஹேசிஸ் ஆயில் என்ற போதைக்கு பயன்படுத்தும் ஆயில் இருந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.2 கோடி என்று கூறப்படுகிறது.
இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை ஆயிலை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சுமார் ரூ. 2.2 கோடி மதிப்புள்ள போதை ஆயில் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’