மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கர்ணன் . டி.ராஜேந்தரின் லட்சிய திமுக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர். இவர்  திருமங்கலம், சோழவந்தான் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் வாட்ச்மேனாக கீழ உரப்பனூரை சேர்ந்த பெரியகருப்பன் பணி புரிந்து வந்தார். 

இவரது மனைவி சுந்தரவள்ளி, சிங்கப்பூரில் பணி புரிகிறார். ஒரு மகள்,  மகன் உள்ளனர். மகள் சுந்தரவள்ளி கணவரை பிரிந்து தந்தை பெரியகருப்பனுடன் வசித்து வருகிறார். இவர் தந்தையை காண அடிக்கடி  ஓட்டலுக்கு வரும்போது, ஓட்டல் ஓனர் கர்ணனுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நாளுக்கு நாள் வளர்ந்த இவர்களது நட்பு நாளடைவில் கல்லாக காதலாக மாறியது. இதனால் அப்பாவை பார்க்க வரும் சுந்தரள்ளி ஓட்டல் ஓனர் கர்ணனுடன் தனிமையில் இருந்துள்ளார். இந்த விஷயம் அவரின் அப்பா  பெரியகருப்பனுக்கு தெரிந்ததால் இருவரையும் கண்டித்ததால் அவருக்கும், ஓட்டல் ஓனர் கர்ணனுக்கும் அடிக்கடி தகராறு  ஏற்பட்டது.

பெரியகருப்பன் மகள் சுந்தரவள்ளி, விவாகரத்து வழக்கு சம்பந்தமாக திருமங்கலம் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். அப்போது ஓட்டலில் இருந்த பெரியகருப்பன், ஓட்டல் ஓனர் கர்ணன் இடையே  தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கர்ணன், கடையிலிருந்த இரும்பு கரண்டியால் பெரியகருப்பனை தலையில் கொடூரமாக தாக்கினார்.  இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு  விழுந்தார். 

உடனடியாக கர்ணன், திருமங்கலம் நீதிமன்றத்திற்கு வந்து, சுந்தரிக்கு வழக்கில் உதவுவது போல் உடன்  இருந்துள்ளார். ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்கள், தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த பெரியகருப்பனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி  பெரியகருப்பன் நேற்று பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனையில் அடித்து கொல்லப்பட்டது உறுதியானது.  திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து  கர்ணனை கைது செய்தனர்.