வயதுக்கு மீறி தனது பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட தந்தையை மகனே வெட்டி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தென்காசியை சேர்ந்தவர் 70 வயதான தங்கராஜ். இவருக்கு திருமணம் ஆகி 43 வயதில் திருக்குமரன் என்ற மகன் உள்ளார். திருக்குமரனின் பள்ளி தோழி சண்முக சுந்தரி. இவரை ஆசை வார்த்தைகள் கூறி திருக்குமரனின் தந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார். தனது பள்ளி தோழியே தனக்கு சித்தியாக வந்ததால் திருக்குமரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தங்கராஜ் தனக்கு இருந்த 40 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கர் முதல் மனைவிக்கும், 25 ஏக்கரை இரண்டவாது மனைவியான சண்முக சுந்தரிக்கும் எழுதி வைத்துள்ளார். இதனால் 10ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை மகனுக்கு இடையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் தங்கராஜ். அங்கு வந்த திருக்குமரன் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அப்போது திருக்குமரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு திருக்குமரன் தானாக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.