அடிக்கடி வெளியூர் சென்ற மகன்.. சைடு கேப்பில் மருமகளுக்கு பிராக்கெட் போட்டு உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்.!

வாழப்பாடி அருகே மகன் வெளியூர் சென்ற நேரத்தில் மருமகளை மாமனார் உல்லாசத்திற்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The father-in-law invited the daughter-in-law to bed

வாழப்பாடி அருகே மகன் வெளியூர் சென்ற நேரத்தில் மருமகளை மாமனார் உல்லாசத்திற்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், தனது கணவர் வெங்கடேஸ்வரனுடன் வசித்து வருகிறார். லாரி டிரைவரான வெங்கடேஸ்வரன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று விடுவார். இதனால், வீட்டில் மாமனார் பச்சமுத்து, மாமியார் தனலட்சுமி ஆகியோருடன் அப்பெண் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க;- காதலன் ஃபர்ஸ்டு நண்பர்கள் நெக்ஸ்ட்.. போதை பொருள் கொடுத்து பள்ளி மாணவியை நாசம் செய்த கும்பல்.. சென்னையில் பகீர்

The father-in-law invited the daughter-in-law to bed

கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்த மருமகளிடம் மாமனார் பச்சமுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அவர், மருமகளை உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவும், வீட்டை விட்டு வெளியே போ எனக்கூறி சரமாரியாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் பற்றி வீட்டிற்கு வந்த தனது கணவர் வெங்கடேஸ்வரன் மற்றும் மாமியார் தனலட்சுமியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள், பச்சமுத்துவை தட்டிக்கேட்காமல் அப்பெண்ணை அசிங்கமாக பேசியுள்ளனர்.

The father-in-law invited the daughter-in-law to bed

உடனே தனது தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தை அப்பெண் கூறியுள்ளார். அவர் வந்து தட்டிக் கேட்டபோது, அவரையும் ஆபாசமாக பேசி அனுப்பியுள்ளனர். இதுபற்றி வாழப்பாடி போலீசில் அப்பெண் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, மருமகளை உறவுக்கு அழைத்து தாக்கிய மாமனார் பச்சமுத்து மற்றும் மாமியார் தனலட்சுமி, கணவர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருமகளை மாமனார் உல்லாசத்துக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- தூங்கிக்கொண்டிருந்த அண்ணியை பார்த்து ஏங்கிய கொழுந்தன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios