சென்னை நந்தம்பாக்கத்தில் குழந்தைகளுக்கான பீஸ் கட்ட வைத்திருந்த பணத்தை எடுத்து கணவர் சூதாடியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.  சென்னையை அடுத்த  நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு வயது (43). 

சென்னை நந்தம்பாக்கத்தில் குழந்தைகளுக்கான பீஸ் கட்ட வைத்திருந்த பணத்தை எடுத்து கணவர் சூதாடியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு வயது (43). இவர் குடிபோதைக்கு அடிமையானவர் ஆவார். வேலைக்கு செல்லாமல் குடி, சூதாட்டம் என்று பொழுதை கழித்து வந்தார் சுரேஷ். இவருக்கு திருமணமாக புவனேஸ்வரி(39) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். கணவன் ஊதாரி என்பதால் மனைவி புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். புவனேஸ்வரி தந்தை ராஜேந்திரனும் மகளின் குடும்பச் சூழலை புரிந்துக் கொண்டு மகளுக்கு உதவி செய்து வந்தாா். 

இந்நிலையில் மகன் மற்றும் மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட புவனேஸ்வரி சிறிது சிறிதாக ரூ.20 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். இந்த நிலையில் பள்ளி கட்டணம் கட்டுவதற்காக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுக்க இன்று புவனேஸ்வரி பீரோவை திறந்த போது அதில் பணத்தை காணவில்லை. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து கணவரை விசாரித்தார் அப்போது கணவன் சுரேஷ்பாபு அதற்கு சரியாக பதில் சொல்ல வில்லை. பணத்தை மனைவி புவனேஸ்வரிக்கு தெரியாமல் எடுத்து நண்பர்களுடன் சூதாட்டம் ஆடி இழந்து விட்டதாக கூறினார். அதை கேட்டு அதிர்ந்துபோன மனைவி புவனேஷ்வரி கதறி அழுதார். உதவாக்கரை கணவனால் காலம் முழுக்க கஷ்டப்பட வேண்டுமா என எண்ணி மனமுடைந்த புவனேஸ்வரி இரவெல்லாம் அழுது கொண்டே இருந்ததாக தெரிகிறது. 

பின்னர் நேற்றிரவு படுக்கை அறையில் சுடிதார் துப்பட்டாவால் மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த புவனேஸ்வரியின் தந்தை ராஜேந்திரன், இது குறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நந்தம்பாக்கம் போலீசார் புவனேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மனைவியின் மரணத்திற்கு காரணமாக கணவன் சுரேஷ்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனின் சூதாட்டத்தால் தனது பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த தாய், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.