மருமகள் மாமனாரை அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

மருமகள் மாமனாரை அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீசார் மருமகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நாத்புரா கிராமத்தை சேர்ந்தவர் பதியா கட்டாரா, இவரது மருமகள் சந்தோஷூ இந்நிலையில் மாமனார் மருமகளுக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டது. அதில் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது, அப்போது அவரது மருமகன் சந்தோஷ் கோபத்தின் உச்சிக்கே சென்றார், மாமனாரை அடிக்கப் பாய்ந்தார், அப்போது அங்கிருந்த குடும்பத்தினர் தலையிட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.

இதையும் படியுங்கள்: மனைவியின் தலையுடன் 12 கி.மீ நடந்தே போலிஸ் ஸ்டேசன் போன கணவன்... கள்ளக் காதலால் விபரீதம்..??

ஆனால் அப்போதும் சந்தோ ஓயவில்லை, இந்நிலையில் அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் தடுத்து சமாதானப்படுத்தினர், ஆனால் அவர்கள் இருவரும் மாறிமாறி வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். பின்னாளில் மருமகள் சந்தோஷ் மாமனாரின் அந்தரங்க உறுப்பில் பலமாக பலமுறை எட்டி உதைத்தார், இதில் பலத்த காயமடைந்த மாமனார் கீழே சரிந்தார், அந்தரங்க பகுதியில் அவருக்கு கடும் காயம் ஏற்பட்டதில் அவர் மயக்க நிலைக்கு சென்றார், உடனே குடும்பத்தினர் அவரை குஷல்கர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்கள்: காதலனை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசம்.. மகளை அந்த மாதிரியான கோலத்தில் பார்த்த தந்தை வெறிச் செயல்.

அங்கே இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றார், பின்னர் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி வீட்டுக்கு அனுப்பினார், பத்தியா கட்டார் வீடு திரும்பினார், ஆனால் ஒரு நாள் கழித்து மீண்டும் அவருக்கு வலி அதிகமானது, இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் பத்தியா கட்டாராவின் இளைய மகன் திடா கட்டாரா தனது அண்ணி சந்தோஷ் மீது புகார் கொடுத்தார்.

இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மருமகள் சந்தோஷை கைது செய்தனர். மாமனாரை அந்தரங்க உறுப்பில் மருமகள் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இறந்த பத்தியாவின் மனைவி பிஜூ மாமனார் மருமகள் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட முயற்சிக்கிறார், ஆனால் அதையும் மீறி மருமகள் மாமனாரின் அந்தரங்க உறுப்பில் பலமாக பல முறை எட்டி உதைக்கிறார் இது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.