Asianet News TamilAsianet News Tamil

கஞ்சா விற்றவர்களின் சொத்துக்கள் முடக்கம்..! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

மதுரையில் கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்ட 20பேரின் வங்கி கணக்குகள் முடக்கிய போலீசார், அவர்களின்  சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

The assets of those who sold ganja are frozen The police took action
Author
Madurai, First Published Jul 12, 2022, 4:34 PM IST

கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் `ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துவருகின்றனர். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களில் கஞ்சா வியாபாரம் நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை தென்மண்டல ஐஜி அஷ்ரா கார்க்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.  முதற்கட்டமாக தென்மாவட்டங்களில் கஞ்சா வியாபாரிகளின் 1,238 வங்கி கணக்குகளையும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

பரபரப்பு !! வரதட்சனை கொடுமை.. கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை.. கூண்டோடு சிக்கிய கணவன் வீட்டார்..

44 வயதில் கல்லூரி மாணவியா.. இந்து கடவுள்களை அவமானப்படுத்த கனடா பயணம்.. லீனா மணிமேகலை மீது புகார்.

The assets of those who sold ganja are frozen The police took action

சொத்துக்கள் முடக்க நடவடிக்கை

அதன் தொடர் நடவடிக்கையாக மதுரை மாநகரில் நேற்று முன்தினம் கோரிப்பாளையம் ஜாம்புரோபுரத்தில் 1.250 கஞ்சாவுடன் அப்பகுதியை சேர்ந்த கிஷோர் (20) தெற்குவாசல் மணிகண்டன் (19) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் வியாபாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களது சொத்துக்களை முடக்க துணை ஆணையர் தலைமையில் குழு அமைத்தும் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.மதுரையை தொடர்ந்து கஞ்சா விற்பனை தடுக்க தமிழகம் முழுவதிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

டுவிட்டரில் வெறுப்பு பேச்சு.. பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது.. மதக்கலவரத்தை தூண்டியதாக வழக்கு..

Follow Us:
Download App:
  • android
  • ios