Asianet News TamilAsianet News Tamil

பண ஆசையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய மருத்துவர் வற்புறுத்தல்..? உயிர் இழந்த நடிகை சேத்தனா ராஜின் தந்தை வேதனை

கன்னட தொலைக்காட்சி நடிகரான சேத்தனா ராஜ், தவறான உடல் குறைப்பு சிகிச்சை மூலமாகவே உயிர் இழந்ததாக நடிகையின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.
 

The actress father has alleged that doctors forced Chetana Raj to undergo surgery for money
Author
Bangalore, First Published May 20, 2022, 9:17 AM IST

லேசர் சிகிச்சை நடிகை மரணம்
 பெங்களூரு புறநகர் மாவட்டம் வீரேனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் சேத்தனா ராஜ். சின்னத்திரை நடிகையான இவர், கடந்த 16-ந் தேதி ராஜாஜிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க, கொழுப்பு அறுவை சிகிச்சை செய்தார். அப்போது அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.அவரது மரணம் சின்னத்திரை நடிகைகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் தமக்கு தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் குறிப்பிட்டுள்ளார். 

The actress father has alleged that doctors forced Chetana Raj to undergo surgery for money

நகையை அடகு வைத்து சிகிச்சை

இந்தநிலையில் அறுவை சிகிச்சைக்கு வீட்டில் ஒத்துக்கொள்ளாத காரணத்தால் தனது நகையை 80 அயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து சிகிச்சை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை சேத்தனா ராஜுவின் தந்தை வரதராஜ் கூறுகையில், இந்த மருத்துவமனை உரிமம் இல்லாமல் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். பணத்துக்காக மருத்துவர் தனது மகளை மூளை சலவை செய்ததாக கூறியுள்ளார்.  அறுவை சிகிச்சைக்கு நாங்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் சேத்தனா ராஜூவின் நண்பர்கள் தான் அறுவைசிகிச்சைக்கு கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். அறுவைசிகிச்சையின் போது மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு அவரது நண்பர்கள் அழைத்து சென்றதாகவும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சேத்தனா ராஜூ இறந்து விட்டதாக தெரிவித்தார். 

The actress father has alleged that doctors forced Chetana Raj to undergo surgery for money

மருத்துவமனைக்கு நோட்டீஸ்

மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை கட்டணமாக மருத்துவமனை எடுத்துக்கொண்டதாக தெரிவித்த வரதராஜ் தனது மகளையும் இழந்துள்ளதாக வேதனையோடு கூறினார்.  இந்தநிலையில் லேசர் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி இல்லாத டாக்டர் ஷெட்டி மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவ துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios