இளம் எழுத்தாளரை 75 வயது தொழிலதிபர் நட்டத்திர ஓட்டலுக்கு அழைத்து அங்கு பாலியல் பலாத்தாகரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இளம் எழுத்தாளரை 75 வயது தொழிலதிபர் நட்டத்திர ஓட்டலுக்கு அழைத்து அங்கு பாலியல் பலாத்தாகரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசீர் வீசுவது, காதலித்து கற்பழித்து மோசடி செய்வது, திருமணம் செய்து பின் வரதட்டணை கேட்டு கொடுமை படுத்துவது என எண்ணற்ற கொடுமைகளைபெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த வரிணையில் இளம் எழுத்தாளரிடம் 2 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பின்னர் அந்த பெண்ணை ஒட்டல் அறைக்கு வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. "மும்பையின் ஜூஹு பகுதியில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 35 வயது எழுத்தாளர் ஒருவரை 75 வயதான தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஐபிசி மற்றுப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை பாதாள உலக தாதா தாவூத் இப்ராஹிம் என்ற பெயரில் அந்த தொழிலதிபர் மிரட்டி பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகாரின் தெரிவித்துள்ளார். தான் கற்பழிக்கப்பட்டது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாகவும் அந்தப் பெண் மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்றிருப்பதுடன் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை தர மறுத்ததுடன் மாறாக அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனக்கும் தாவூத் இப்ராஹிம்வுடன் நேரிடி தொடர்பு உள்ளது. இதைப் பற்றி யாரிடமாவது வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என அந்த தொழிலதிபர் மிரட்டியுள்ளார். அதேநேரத்தில் டி- கேங்கில் இருந்து தனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இந்நிலையில் போலீசார் இந்த வழக்கை அம்போலி காவல் நிலையத்திலிருந்து எம்ஐடிசி காவல்துறைக்கே மாற்றியுள்ளனர். அந்தப்பெண்ணின் புகாரை எம்ஐடிசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
