Asianet News TamilAsianet News Tamil

பிரிந்து சென்ற காதலியை அடைய 43 லட்சத்தில் தொழிலதிபர் செய்த பயங்கர மாந்திரீகம். கிறுகிறுக்கவைக்கும் பகீர் தகவல்

உயிருக்குயிராய்  காதலித்து பின் பிரிந்து சென்ற காதலியை மீண்டும் சேர்த்து வைப்பதாக கூறிய மந்திரவாதியை நம்பி இளைஞரொருவர் 43 லட்சம்  ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Terrible witchcraft done by a businessman for Rs 43 lakh to reach his estranged girlfriend. Dazzling Shocking information.
Author
Chennai, First Published Sep 3, 2021, 11:13 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உயிருக்குயிராய்  காதலித்து பின் பிரிந்து சென்ற காதலியை மீண்டும் சேர்த்து வைப்பதாக கூறிய மந்திரவாதியை நம்பி இளைஞரொருவர் 43 லட்சம்  ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஏமாற்றப்பட்டது குறித்து அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காதலிக்காக 43 லட்சம் பணத்தை சாமியாரிடம் கொடுத்து ஏமார்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மனிதன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும், சில நேரங்களில் தன்னையே அறியாமல் அவன் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு விடுகிறார்.அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் அவன் சுய சிந்தனை இழந்து செய்யும் காரியங்கள் அவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றிவிடுகிறது என்பதுதான் சோகம். ஒரு பொருளை அடைவதற்காக சிலர் எடுக்கும் பகீரத முயற்சிகள் ஒரு கட்டத்தில் மூட நம்பிக்கை எனும் வலைக்குள் அவர்களை தள்ளி விடுகிறது என்றே சொல்லலாம். இப்படி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் விஷயத்திலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 28 வயதான அஜய் பட்டேல் என்ற தொழில் அதிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. பின்னாளில் அது காதலாக மாறியது. அஜய் பட்டேல், தனது காதலியுடன் மகிழ்ச்சியாக உலா வந்தார். திடீரென ஒரு நாள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவள் அஜய் பட்டேலை விட்டு விலக தொடங்கினாள். 

Terrible witchcraft done by a businessman for Rs 43 lakh to reach his estranged girlfriend. Dazzling Shocking information.

பட்டேலுடன் பேசுவதை அவள் நிறுத்திக் கொண்டாள், ஒன்றுமே புரியாத அஜித் பட்டேல் காதலியின் பிரிவால் சோகத்தில் மூழ்கினார். மீண்டும் எப்படியாவது தனது காதலியுடன் பழையபடி சகஜமாக பழகவேண்டும் என முடிவு செய்த அவர், அதற்கான வழிகள் என்னென்ன என்று ஆராய்ந்தார். எப்படியாவது அவளது மனதை மாற்ற முயற்சிக்க முடிவு செய்த அந்த இளைஞர்,  மந்திரம், மாந்திரீகத்தால் அவருடைய இதயத்தில் எளிதில் இடம்பிடிக்க விரும்பினார். இதற்காக அவர் சாமியார் அணில் ஜோஷி என்ற நபரை அனுகினார். அஜய் பட்டேலின் நிலைமையை புரிந்த கொண்ட சாமியார் அணில் ஜோசி, பிரிந்து சென்ற காதலியை மீண்டும் சேர்த்து வைப்பது தனது கடமை என அஜய் பட்டேலிடம் உறுதியளித்தார். ஆனால் இதற்கு நிறைய பரிகாரங்கள் செய்ய வேண்டி இருக்கிறது, அதிக பணம் செலவாகும் என ஆரம்பத்திலேயை நூல் விட ஆரம்பித்தார் சாமியார் அணில் ஜோஷி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, காதலியே என்னுடன் சேர்த்து வையுங்கள் அது போதும் என சம்மதம் தெரிவித்தார் அஜய் பட்டேல்.

Terrible witchcraft done by a businessman for Rs 43 lakh to reach his estranged girlfriend. Dazzling Shocking information.

நிச்சயம் சேர்த்துவைக்கிறேன் கொஞ்சம் நிதானமாக இருங்கள் எனக் கூறிய சாமியார் அணில் ஜோஷி, கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக மாதாமாதம் தவணை முறையில் அஜய் பட்டேலிடம் இருந்து பணத்தை கறந்துள்ளார். இதுவரை கிட்டத்தட்ட அந்த சாமியாருக்கு அஜய் பட்டேலிடம் இருந்து 43  லச்டம் ரூபாய்  பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பணம் செலவாகியும் அதற்கு எந்த பலனும் ஏதும் ஏற்படவில்லை. அதற்கான அறிகுறியே இல்லை. பிரிந்து சென்ற காதலி திரும்பி பார்க்க கூட பார்க்கவில்லை, ஒருகட்டத்தில், மாந்திரீகம் என்ற பெயரில் சாமியார் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்த அஜய்  பட்டேல் தன்னிடம் இருந்து ஏமாற்றிய பணத்தை திருப்பித் தருமாறு சாமியார் அணில் ஜோசியிடம் கோரினார். ஆனால் அப்படி பணம் ஏதும் தான் வாங்கவில்லை என ஜோஷி மறுத்துவிட்டார். அதைக்கேட்டு அதில் அதிர்ச்சியடைந்த  அஜஸ் பட்டேல், காதலியையும் இழந்து, கையில் இருந்த பணத்தையும் இழந்து கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார். 

Terrible witchcraft done by a businessman for Rs 43 lakh to reach his estranged girlfriend. Dazzling Shocking information.

காதலன் அஜய் பட்டேல் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை அந்த சாமியார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அஜய் பட்டேல் வேதனை தெரிவித்துள்ளார். இதற்கான செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரும் நிலையில், அஜய் பட்டேல் நிலைமை குறித்து சிலர் அனுதாபப்படுவதுடன், அவரின் கோமாளித்தனத்தை எண்ணி பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios