சென்னையில் காதலனை ஆள் வைத்து கடத்திய வழக்கில் அவரது காதலியான டென்னிஸ் வீராங்கணை வாசவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

 

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்த நவீத் அகமது. இவர் லயோலா கல்லூரியில் 2-ம் ஆண்டு பிடித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை சேத்துப்பட்டு அருகே இருச்சகர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்து கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் சரவணன் ஆகியோரை முதலில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நவீத்தின் காதலி தான் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது என்று தெரியவந்தது. 

நவீத் அகமது- வாசவி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் காதலில் பிரச்சனை ஏற்படவே, காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்கள் மூலம் நவீத்தை கடத்தி அவரது செல்போனை பறிக்க காதலி வாசவி திட்டமிட்டார். டென்னிஸ் விளையாட்டு வீராங்கணையான இவர், மாநில அளவிலும், இந்தியாவில் நடந்த பல்வேறு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் படித்து வரும் வாசவி அங்கேயே டென்னிஸ் பயிற்சிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் வாசவியை கைது செய்ய போலீசார் தேடுவதை அறிந்த அவர் அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்றார். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுற்றிவளைத்து வாசவியை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கோகுல், அபிஷேக் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி மாணவன் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு நவீத்திடம் இருந்து பறித்த செல்போனை கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். காதலனை காதலியே கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.