தூங்கி கொண்டிருந்த வழக்கறிஞர் கொடூரமாக வெட்டி படுகொலை.. இரட்டை கொலை செய்து தப்பிய ராணுவ வீரர்.. நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் அசோக்குமார்(29). இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இவரது உறவினராக ராணுவ வீரர் சுரேஷ் (27) என்பவருக்கும் நீண்ட காலமாக இடத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

tenkasi double murder...police investigation

ஆலங்குளம் அருகே  இடத்தகராறு காரணமாக இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் அசோக்குமார்(29). இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இவரது உறவினராக ராணுவ வீரர் சுரேஷ் (27) என்பவருக்கும் நீண்ட காலமாக இடத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

tenkasi double murder...police investigation 

இந்நிலையில், வழக்கறிஞர் அசோக்குமாருக்கு ஆதரவாக அவரது பெரியப்பா துரைராஜ் (57) பேசி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் அப்பகுதி பேருந்து நிலையம் நின்று கொண்டிருந்த துரைராஜை  அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தூக்கிக்கொண்டிருந்த அசோக்குமாரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதில், இருவரும் உயிரிழந்தனர். 

tenkasi double murder...police investigation

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ராணுவ வீரர் சுரேஷை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios