தெலங்கானாவில் காரில் கடத்தி சென்று சிறுமியை கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தெலுங்காவில் கால்நடை மருத்துவர் டிஷா லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர்கள் உள்ளிட்ட 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரும் தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டர் செய்தனர். 

இந்நிலையில், தெலங்கானாவின் அமீன்பூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி ரேஷ்மி (16). ரேஷ்மி நேற்று காலை 9 மணிக்கு வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை பிடித்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர், அமீன்பூர் வனப்பகுதிக்கு சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இந்நிலையில் மதியம் 2 மணியளவில் தப்பி சாலைக்கு வந்த ரேஷ்மி, போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து கதறிய படி பெற்றோரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அமீன்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அது அமீன்பூர் வனப்பகுதியை காட்டியது. இதனையடுத்து, காயங்களுடன் இருந்த ரேஷ்மியை மீட்டனர். சிறுமி தெரிவித்த அடையாளங்களை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.