என் பொண்டாட்டி கூட கள்ளத்தொடர்பு வச்சிருக்கான சந்தேகத்தில் கொலை செஞ்சிட்டேன்.. கொத்தனார் கொடுத்த பகீர் தகவல்!

சென்னையை அடுத்த பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் விஜயகாந்த் (37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா. ரேணுகாவின் உறவினரான தர்மபுரியை சேர்ந்த ராஜீவ்காந்தி (32) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார். 

teenager murder case...Laborer arrested

மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாலிபரை ஏரியில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். 

சென்னையை அடுத்த பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் விஜயகாந்த் (37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா. ரேணுகாவின் உறவினரான தர்மபுரியை சேர்ந்த ராஜீவ்காந்தி (32) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார். இவர் ரேணுகாவின் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

teenager murder case...Laborer arrested

பல்வேறு இடங்களில் தேடியும் ராஜீவ்காந்தி கிடைக்கவில்லை. இதனிடையே, பெருங்குடி ஏரியில் வாலிபர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தது ராஜீவ்காந்தி என்பது தெரியவந்தது. கழுத்தில் காயம் இருந்ததால் சந்தேகம் மரணம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், போலீசார் சந்தேகத்தின் பேரில் ரேணுகாவின் கணவர் விஜயகாந்திடம் விசாரணை செய்தனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விஜயகாந்த் போலீசாரிடம் கூறுகையில்;- தர்மபுரியில் திருமணமாகி வேலைக்கு செல்லாமல் சுற்றிய ராஜீவ்காந்தியை சென்னைக்கு அழைத்து வந்து தங்க வைத்தேன். சில நாட்கள் கட்டுமான வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி குடித்து விட்டு சுற்றினார். இந்நிலையில் எனது மனைவியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

teenager murder case...Laborer arrested

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி ராஜீவ்காந்தியை பெருங்குடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்று இருவரும் மது அருந்தினோம். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் ராஜீவ்காந்தி கழுத்தில் குத்தினேன். பின்னர் ஏரியில் தள்ளி விட்டு கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விஜயகாந்தை கைது செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios