முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம் ஜாபல்பூர் மாவட்டத்திலுள்ள பிஜாபுரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி பிங்கி அதே பகுதியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை என்பதால் உறவினர்கள், ஜாபல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வனப்பகுதியில் தலையில் அடிப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தது பிங்கி என்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து, மாணவியின் ஆண் நண்பரான ராமன்சிங் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.
கடந்த வியாழக்கிழமை பள்ளியைவிட்டு வந்த மாணவி தனது ஆண் நண்பரான ராமன்சிங்குடன், பிஜாபுரி வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு அவர் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதை மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த இவர் மாணவியை பின்னோக்கி தள்ளி விட்டுள்ளார். கீழே விழுந்த மாணவி, தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ராமன் சிங்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.