Asianet News TamilAsianet News Tamil

வெளிநாடுகளுக்கு தப்பியோடிய மனைவிகளை மாற்றும் குழு... போலீஸ் வலையில் சிக்கும் விஐபிகள்..!

கேரளாவில் 20 மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவதும், இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. 

Team to change wives who have fled abroad ... VIPs caught in police trap ..!
Author
Kerala, First Published Jan 23, 2022, 1:55 PM IST

கேரள மாநிலம், சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர், காவல்துறையினரிடம், தனது கணவர் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நபருடன் உறவு  வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறான உறவுக்கு,  தான் உட்படுத்தப்பட்டதாகவும் அந்த பெண் தமது புகாரில் தெரிவித்திருந்தார். 

இந்தப் புகாரை விசாரித்த கேரள காவல்துறையினர், அந்த பெண்ணின் கணவர் மற்றும் நண்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. அதன்படி கோட்டயம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் டெலிகிராம் மற்றும் மெசஞ்ஜர் செயலிகள் மூலம் பலர் குழுக்களாக இணைந்துள்ளனர். இந்த குழுவில் இணையும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்ட பின்னர் தங்களது மனைவிகளை மாற்றிகொண்டுள்ளனர்.Team to change wives who have fled abroad ... VIPs caught in police trap ..!

போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தபெண்ணின் கணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும்,அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் உல்லாச விடுதிகளில் ஒன்று கூடி மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருப்பதாக கூறினார்.

இதற்காக கேரளாவில் 20 மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவதும், இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட போலீசார், சைபர் கிரைம் நிபுணர்கள் துணையுடன் இக்குழுவின் உறுப்பினர்களை அடையாளம் காணவும், இக்குழுக்களை தொடங்கியவர்களை பிடிக்கவும் முயற்சி மேற்கொண்டனர்.

இக்குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய விபரங்களையும் திரட்டினர். அவர்கள் மூலம் இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். அப்போது இக்குழுவில் கேரளா மட்டுமின்றி தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்போரும் முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் இதில் உறுப்பினராக இருக்கும் தகவலும் தெரிய வந்தது.Team to change wives who have fled abroad ... VIPs caught in police trap ..!

மனைவிகளை மாற்றிக் கொள்ளும் குழுக்கள் ஒன்று கூடி கொண்டாடிய இடங்களும் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகள் என்பதையும் போலீசார் தெரிந்து கொண்டனர்.

கோட்டயம் பெண் புகார் கொடுத்த சில நாட்களில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருக்கு துணை புரிந்தவர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போலீசாரின் விசாரணை வேகமெடுக்க வில்லை.

இதற்கிடையே இந்த குழுவில் இடம்பெற்ற முக்கிய பிரமுகர்கள் சிலர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். மேலும் சிலர் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்த வழக்கின் விசாரணை தற்போது மந்தமாகிவிட்டதாக கூறப்படுகிறது.Team to change wives who have fled abroad ... VIPs caught in police trap ..!

அதேநேரம் போலீசார் கூறும்போது, இக்குழுக்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும் இதனால், விசாரணை தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பாதிக்கப்பட்ட பெண்களை அணுகி அவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்து அவர்களை புகார் கொடுக்க வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios