மதுரை மாவட்டம் எழுமலையை அடுத்து இருக்கிறது எம்.கல்லுப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வம்(35). இவர் மல்லபுரம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாலை நேரத்தில் வீட்டில் வைத்து டியூஷன் நடத்தி வருகிறார். அந்த பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளனர்.

செல்வம் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் செல்வத்தின் டியூஷன் சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்திருக்கிறார். இதில் சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் செல்வதை உசிலம்பட்டி மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டியூஷன் படிக்கச் சென்ற மாணவியை ஆசிரியரே கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.