பள்ளி வகுப்பறையில் ஆசிரியையை ரதிதேவியை 30 இடங்களில் கத்தியால் குத்தி கணவர் கொடூரமாக கொலை செய்தார். தாய் கொல்லப்பட்டது தெரியாமல் அவருடைய இரட்டை குழந்தைகள் அம்மா அம்மா என்று அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் குருமுனிஸ்வரன் (36), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி ரதி தேவி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹர்‌ஷவர்தன் (5), ஹர்சவர்த்தினி (5) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, ரதிதேவி காரியாபட்டி அருகே உள்ள தனது பெற்றோரும் வசித்து வந்தார். இரு குழந்தைகளுடன் வசித்து வந்த ரதிதேவி சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, பெற்றோருடன் குருமுனீஸ்வரன் தகராறில் ஈடுபட்டதால் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வந்து ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட்டுன் பள்ளியில் நுழைந்த குருமுனீஸ்வரன் மாணவர்கள் மத்தியில் ரதி தேவியை சரமாரியாக 30 இடங்களில் குத்திக்கொலை செய்தார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காவல் நிலையத்தில் குருமுனீஸ்வரன் சரணடைந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும் போது, “ரதிதேவி உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தி மற்றும் ஸ்குரு டிரைவரால் குத்திய கொடூர காயங்கள் இருந்தன” என்று தெரிவித்தனர். 

ரதிதேவியின் உடல் கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்தில், அவருடைய பெற்றோர் காரியாபட்டியில் இருந்து வந்தனர். உறவினர்களும் வந்திருந்தனர். மேலும், தாயை, தன்னுடைய தந்தையே கொன்றது தெரியாமல் அவர்களுடைய இரட்டை குழந்தைகள் ஹர்சவர்ஷினி, ஹர்சவர்ஷன் ஆகியோர் அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.