Asianet News TamilAsianet News Tamil

திருமங்கலத்தில் பயங்கரம்.. பாத்ரூமில் ஆசிரியை சித்ராவை கொன்று புதைத்த வழக்கறிஞர் தற்கொலை..!

மதுரை திருமங்கலத்தில் ஆசிரியை சித்ராவை அடித்து கொலை செய்து பாத்ரூமில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

teacher Murder...lawyer commits suicide
Author
Madurai, First Published May 5, 2021, 1:51 PM IST

மதுரை திருமங்கலத்தில் ஆசிரியை சித்ராவை அடித்து கொலை செய்து பாத்ரூமில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆறுமுகம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (42). வழக்கறிஞர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து 7 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். திருமங்கலம்  பசும்பொன் தெருவை சேர்ந்தவர் சித்ராதேவி (32). யோகா பயிற்சியாளர். கணவனை பிரிந்து வாழ்ந்த இவரிடம் அரிகிருஷ்ணனின் மகள், யோகா பயின்றுள்ளார். மகளை யோகா வகுப்பிற்கு அழைத்து சென்று வரும்போது சித்ராதேவிக்கும், அரிகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

teacher Murder...lawyer commits suicide

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2ம் தேதி இருசக்கர வாகனத்துடன் சித்ராதேவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை கன்னையா  திருமங்கலம் காவல் நிலையத்தில் மார்ச் 5ம் தேதி புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தேர்தலை காரணம் காட்டி வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.  வழக்கறிஞர் அரிகிருஷ்ணனுக்கும், தனது மகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரிடம் விசாரிக்கும்படி எஸ்பி, முதல்வரின் தனிப்பிரிவிற்கு தனித்தனியாக புகார்கள் கொடுத்தார். பின்னர் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில், திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர் அரிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உடனே அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது அவர் 10 பக்கங்களில் போலீசாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

teacher Murder...lawyer commits suicide

அந்த கடிதத்தில், சித்ராதேவியை தானே கொலை செய்து படுக்கையறை பாத்ரூமில் குழிதோண்டி புதைத்து சிமென்ட் பூசி இருப்பதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும், கொலை செய்த குற்றத்தை பொறுக்கமுடியாமல்  தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கடிதத்தில் சித்ரா தேவியின் இருசக்கர வாகனம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலை சைக்கிள் ஸ்டாண்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

மேலும், ஆசிரியை சித்ராதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவர்களுக்குள் நடத்தை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன் சித்ராவை அடித்து கொலை செய்து படுக்கையறை பாத்ரூமில் புதிய சிமென்ட் பூச்சுப்பணி நடந்திருந்தது. டாக்டர்கள்  முன்னிலையில் சித்ராதேவியின் உடலை தோண்டி எடுத்தனர்.  இந்த சம்பவம் திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios