கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கிறது பானூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பத்மராஜன்(49). ஆசிரியரான இவர் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் பானூரைச் சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 10 வயது சிறுமி 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி கழிவறையில் வைத்து பத்மராஜன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதுள்ளார்.

மாணவியை மிரட்டிய பத்மராஜன் அது குறித்து யாரிடமும் வெளியே கூறக்கூடாது என்றும் மீறி கூறினால் கொலை செய்து விடவதாக எச்சரித்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி யாரிடமும் எதுவும் கூறாமல் இருந்திருக்கிறார். சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டது போல காட்சியளித்த மாணவியை கண்டு பதறிய பெற்றோர் கவுன்சிலிங் அளிக்க அழைத்து சென்றனர். அப்போதுதான் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை மாணவி கூறியிருக்கிறார். மருத்துவ பரிசோதனையிலும் அது உறுதியாகியிருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் உடனடியாக குழந்தைகள் நல தன்னார்வ குழுவிடம் புகார் அளித்தனர். அதன்படி குழந்தைகள் நல குழு சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பத்மநாதனை தீவிரமாக தேடி அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பத்மராஜன் தலைமறைவாக இருக்க உடந்தையாக இருந்ததாக அப்பகுதி பாஜக பிரமுகர் ஒருவரும் கைதாகி இருக்கிறார்.