அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு, என்கிற பழமொழியை முறியடித்து, நாளுக்கு நாள் பெண்கள், ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை செய்து வருகிறார்கள். பெற்றோர்களும் இந்த உலகில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பால்வேறு அநீதிகள் அரங்கேறினாலும், பள்ளியையும், அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும்  நம்பி மட்டுமே படிக்க அனுப்புகிறார்கள்.

ஆனால் பெற்றோர் நினைப்பதை பொய்யாக்கும் விதமாக சில, கொடூர மனம் படைத்த ஆசிரியர் ஒருவர், மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்களுடைய வலையில் வீழ்த்தி, பள்ளி வளாகத்திலேயே பாலியல் சீண்டல்கள் செய்யும் அவலமும் அரங்கேறி உள்ளது.

தற்போது, சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ...  பெற்றோர் மற்றும் பார்போரின்  ஈரக்குலையை நடுங்க வைக்கும் வகையில் உள்ளது. ஆனால் எந்த பள்ளியில் இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறித்த எந்த தகவல் வெளியாகவில்லை.

தன்னிடம் படிக்கும்  மாணவி ஒருவரை, தந்திரமாக தனியே வரவைத்து, அவரிடம் ஆசை வார்த்தைகள் பேசி  தன்னுடைய பாலியல் சீண்டல்களை துவங்குகிறார் ஆசிரியர் ஒருவர் . இந்த காட்சி வெளியானதில் இருந்து, இந்த ஆசிரியர் யார் என்பதை கண்டு பிடித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெட்டிசன்கள் மற்றும் பலரின் கோரிக்கையாக இருக்கிறது.